சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது.
அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான