இலங்கையில் மிகக் குறைந்த அளவில் வாழ்ந்து வரும்
கஃபீர் சமூகத்தில் ஆண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பது அச்சமூகத்தின்
எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தனது பேத்தியுடன் கொஞ்சும் கஃபீன் இனப் பெண்மணி ஒருவர்
இம்மக்கள் பிறப்பால் இலங்கையர்களாகவும் உதிரத்தால்
ஆப்பிரிக்கர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இங்கும் இல்லை,
அங்கும் இல்லை என்பதே யதார்த்தமாக உள்ளது.