செயற்கை முறையில் கோழி மற்றும் பேகர் உணவு தயாரிப்பு.. பசி போக்க உதவுமா..?!




பெருகி வரும் உலக உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும்.. உணவுக்காக பெருமளவு உயிரினங்கள்.. சூழல் அழிக்கப்படும் நிலையிலும் சில உயிர் கலங்களைக் கொண்டு அவற்றை சரியான வளர்ப்பு ஊடகங்களில் வளர்த்து தேவையை பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளை தயாரிக்கும் பொறிமுறை கண்டறியப்பட்டுள்ளதோடு.. சூழலுக்கும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் உதவக் கூடிய உணவுகளை பல நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரிக்கவும் ஆரம்பித்துள்ளன.