பச்சை பச்சை மனதை இதப்படுத்தும் பச்சை..!

//பச்சை மனிதன்//மனிதன் கூர்ப்பின் பாதையில் கடந்து வந்த காலங்களில் அதிகம் பச்சைப் பசேல் என்ற இயற்கையையே அதிகம் கண்டு வந்ததாலோ என்னவோ பச்சைப் பசேல் என்ற இயற்கைச் சூழல், மனிதனில் ஏற்படுத்தும் மன அழுத்தத்தை (Stress) போக்க உதவுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.பச்சைப் பசேல் என்ற இயற்கைக் காட்சிகளை தினமும் ரசிப்பதன் மூலம் மனதை இதப்படுத்தி மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல்நலத்தை பேண முடியும் என்கின்றனர்