வரிக் குதிரைக்கு ஏன் வரி வந்தது..?! ரகசியம் விடுவிப்பு.


வரிக் குதிரைக்கு (Zebra) ஏன் அதன் உடலினைப் போர்த்தியுள்ள தோலில் வரி வந்தது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

ஹங்கேரி மற்றும் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து குதிரைகளில் இரத்தம் உறிஞ்சும் ஒரு வகை ஈ தான் இதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.


அந்த ஈ யின் தொல்லையில் இருந்து தப்ப.. கூர்ப்பின் வழி.. இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.